Monday, December 19, 2011

திருக்காளத்தி!--3

ஐய னேயெனின் அஞ்சல் தந்திடும்
கையி னானுறை காளத்தி
பைய வேஇசை பாடிப் போற்றுதல்
செய்ய வல்வினை தீருமே....5

நாட்ட மோடருள் நல்கி உய்வழி
காட்டு வானுறை காளத்தி
வேட்டு மின்னிசை மேவ ஏத்திட
வாட்டு மூழ்வினை மாயுமே....6

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

வேட்டு மின்னிசை மேவ ஏத்திட
வாட்டு மூழ்வினை மாயுமே....

திருக்காளத்தி! பெருமானை உருகி வேண்டிய கவிக்கு நன்றி..

Thangamani said...

அன்புள்ள ராஜராஜேஸ்வரி!உங்கள் வருகைக்கும்,
இந்தவலைப்பூவில் இணைந்ததற்கும்,
பாராட்டுக்கும் மிக்கநன்றி!

Thangamani said...

அன்புள்ள ராஜராஜேஸ்வரி!உங்கள் வருகைக்கும்,
இந்தவலைப்பூவில் இணைந்ததற்கும்,
பாராட்டுக்கும் மிக்கநன்றி!

Geetha Sambasivam said...

ஊழ்வினை மாயப் பிரார்த்திக்கிறேன். நன்றி அம்மா.

Thangamani said...

வினைப் பயனாய் வரும் இடரைத் தாங்கும் சக்தியை
இறைவன் அருள்தரும் என்ற நம்பிக்கை.
நன்றி கீதா!