'தான தானன தான தானன
தான தானன தானன
தான தானன தான தானன
தான தானன தானன'
- என்ற சந்தம்.
ஈற்றுச் சீரைத் தவிர மற்ற சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.
பிச்ச னேயெனும் அன்புக் காட்படும்
அச்சன் மேவிய காளத்தி
மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே....1
சுட்ட நீறணி சோமன் கீளுடைக்
கட்டு வானுறை காளத்தி
நிட்டை யாய்த்தொழும் நெஞ்சி னார்த்துயர்
விட்டு மேனிலை மேவுமே....2
வயசு கோளாறு
1 year ago
2 comments:
மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே....//
வைத்தமாநிதிப் பெருமாள், நவ திருப்பதியில் குடிகொண்டிருப்பவர் நினைவில் வந்தார். ஈசனுக்கும் அந்தப் பெயர் உண்டு என இன்று அறிந்தேன்.
'மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே'
ஈசன் அன்பர்களுக்கு, சேர்த்துவைத்த
பெருநிதியாக இருப்பவன் என்ற கருத்தில் சொன்னது.
ஈசனுக்கு வைத்தமாநிதி என்ற பெயர் உண்டா என்பது
தெரியவில்லை கீதா!கருத்துக்கு மிக்கநன்றி!
Post a Comment