வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"
-----------------------------------------------
வலைமீ தினிலே.. படுமீனாய்
...வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!...1
துளிவான் நிலவோ..டலையாறும்
...சுருளார் சடைமேல்.. அணியாகி
வெளியே சிவனா.. டிடுமேடை
...விரையார் கழலோன்..நடமாகும்
தளியே அடியார்.. மனமாகும்
...தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன்
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி
...அகலா துறைமா.. மணிதானே....2
வயசு கோளாறு
1 year ago
8 comments:
வணக்கம்!
”அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!...”
என்ற தங்கள் பாடல் வரிகள் பழைய நினைவுகளை தந்து விட்டன.
முன்பெல்லாம் திருமழபாடி கோயில்
எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில்
தண்ணீர் கரை புரண்டு ஓடும். இக்கரைக்கும் அக்கரைக்கும் பரிசல் கூட விடுவார்கள் தண்ணீர் இல்லாத சமயம் ஆற்றில் இறங்கிச் செல்ல வேண்டும்.அக்கரையில் உள்ள வைத்தியனாதன் பேட்டையில் கோரைப் பாய்கள் பின்னுவார்கள்.
http://youtu.be/4G1xCkO_qqY
or
http://menakasury.blogspot.com
தங்கள் பாடல் கேட்டு மகிழ்ந்தேன். அந்தக்கோவிலுக்கே சென்று வந்தது போலத்தோன்றியது.
திருமழபாடி அருகே தான் எனது பூர்வீக கிராமம் ஆங்கரையும் உள்ளது.
இதோ !! உங்கள் பாடலை மத்யமாவதி ராகத்தில் பாடியிருக்கிறேன்.
அருள் கூர்ந்து அவகாசம் கிடைக்கும்பொழுது கேட்கவும்.
சுப்பு ரத்தினம்.
'அலையார் புனல்சேர்.. மழபாடி
...அகலா துறைமா..மணிதானே!'
முதலில் சிவசிவாவுக்கு நன்றி சொல்கிறேன்.
இந்த ஈற்றடி சிவசிவாவின் பாடலில் உள்ளது.
அதைவைத்து நான் பாடல் செய்தேன்.
உங்கள் பழைய இனிய நினைவுகளை எழுப்பியதற்கு
மகிழ்ச்சியைத் தெரிவிச்சிக்கிறேன் இளங்கோ!
பாய்கள் பின்னும் தொழில் மேம்பட்ட காலம்
என நினைக்கிறேன்.
பாய் என்பது குழந்தைகள்,பெரியவர்கள்
உட்கார,படுக்க மிகவும் உபயோகமாக இருந்த காலம்..
அழகாகப் பகிர்ந்ததற்கு மிக்கநன்றி! இளங்கோ!
.
திரு.சூரி அவர்களுக்கு,
கேட்டும்,பார்த்தும், மகிழ்ந்தேன்!
பக்தியில் தோய்ந்த உங்கள் உணர்வு பூர்வமான
குரலில் பாடல் சிறக்கிறது!
மத்யமாவதி ராகம் பக்தியை வெளிப்படுத்துகிறது!
உங்கள் தொண்டு வளர்க!மிக்க நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன்.
மழபாடியுள் மாணிக்கத்திற்கான பாடல் அருமையாக இருக்கிறது. திருமழபாடி போனதில்லை.
எங்கள் ஊர் பற்றிய பாடல் என்பதனால் உங்களது இந்த பதிவினை GOOGLE + - இல் பகிர்ந்துள்ளேன். நன்றி!
அருமையாய் மனம் நிறைத்த இனிய பாடல் வரிகள் ..பாராட்டுக்கள்..
வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/02/2.html
மிக்கநன்றி ம்மா.
Post a Comment