எருதின் மீத மர்ந்தே ஈசன் எழிலாய் வலம்வருவான்
அருவ மாக இருவர் தேட அழலாய் அருள்பவனாம்
உருவ னாக அன்பர் உளத்தில் உறையும் பரசிவனாம்
பொருது வினையைப் போக்கும் அரனைப் போற்றி மகிழ்மனமே....5
இகழும் நிலையில் வைக்கும் வினைசெய் இடரது தீர்ந்திடவே
முகிழும் அன்பில் பத்தி மலர மூலனை எண் மனமே
நிகழும் யாவும் நலமே யாக நின்மலன் தாளிணையைத்
தகழி ஏற்றி மலர்கள் தூவிச் சாற்ற வரும்திருவே....6
வயசு கோளாறு
1 year ago
4 comments:
தங்கள் மனம் போன போக்கில் நானும் சென்று பார்த்தேன்.
லயித்தது மனம் பஞ்சாட்சரத்தானின் பாதங்களில்.
நன்றி
மனம் நல்ல திசை நோக்கியே போயிருக்கிறது. கூடவே பயணித்தேன்.
வருகைக்கும்,கருத்துக்கும்,மிக்க நன்றி சிவகுமாரன்!
கருத்துக்கு மிக்கநன்றி கீதா!
Post a Comment