இருள ளித்து மருளில் சேர்க்கும் இழிவினை நீக்கியென்றும்
அருள ளிக்கும் பார்வை தன்னில் அபயம் தருமிறைவன்
பொருள ளிக்கும் வாழ்க்கை என்றால் பூரணன் போற்றியவன்
இரும லர்த்தாள் நாளும் எண்ணி இன்புறு வாய்மனமே...7
கனைத்த ழைக்கும் கன்றைப் பரிவாய்க் காத்திடும் தாய்ப்பசுபோல்
நினைத்த ழைக்கும் அன்பர் தமக்கு நிமலன் அருளிருக்கும்
வனத்தில் அன்று பார்த்தன் தனக்கு வரமெனப் பாசுபதம்
தனைக்கொ டுத்த ஈச .னாரைச் சார வருசுகமே...8
வயசு கோளாறு
2 years ago

2 comments:
அம்மா தங்கள் வரிகள் அனைத்தும் இறையருளை சிறப்பாக உணர்த்தும் விதத்தில் இருக்கின்றன! தொடரட்டும் தங்கள் நற்பணி!
அன்புள்ள நம்பிக்கை பாண்டியன்,
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி!
Post a Comment