Thursday, February 11, 2010

திருவடிநிழல் துணையதே !

விடையுடையவன் வியனுறுவிரி சடையுடையவன் மறிமழுப்
படையுடையவன் மயலதும்நைய வயமருள்பவன் மறையறை
நடையுடையவன் அடியரிதயம் இடமுடையவன் ஒளிமலர்த்
தொடையலணியும் நயமுடையவன் திருவடிநிழல் துணையதே !


வயம்=வெற்றி
நயம்=அனுகூலம் செய்பவன்,கண்ணோட்டமுடையவன்

2 comments:

Radhakrishnan said...

திருவடி நிழல் மட்டுமா துணை? அழகிய பாடல்.

Thangamani said...

மகிழ்ச்சியுடன் நன்றி!ராதாகிருஷ்ணன்!

அன்புடன்,
தங்கமணி.