எமனைச் சினத்துடன் எற்றி யுதைத்தோன்
கமல மலர்ப்பதம் காத்திடும் நெஞ்சே!
சுமையென்பார் தீவினை சுட்டிடும் நேசன்
அமலன்மே(வு) ஆரூர் அடை.
கொய்யும் மலர்கொடு கும்பிடும் நெஞ்சமே!
பைய உறுவினைப் பையுளும் நீக்குவன்;
துய்யன்சீர் வன்றொண்டர் சுந்தரர் பாடிடும்
ஐயன்மே(வு) ஆரூர் அடை.
பையுள்=துன்பம்
வயசு கோளாறு
1 year ago
2 comments:
ஆகா, அருமை!
ஆரூரான் ஆரமர்ந்து ஆசிநல்கட்டும்!
அன்புள்ள ஜீவா!
உங்கள் பாராட்டுக்கும்,நலம்விழைவுக்கும்
மிகவும் நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment