Thursday, February 25, 2010

ஆரூர் அடை நெஞ்சே!-- 5.



பொங்கழல் வண்ணனைப் புண்ணிய மூர்த்தியைச்
சங்கரி பங்கனைச் சாற்றுக நெஞ்சமே!
வெங்கடல் ஆம்துயர் வற்றிடச் செய்கிற
அங்கணன்மே(வு) ஆரூர் அடை.

துணியாம் பிறையினைச் சூடும் சடையன்
மணியார் மிடறன் வணங்கிடு நெஞ்சே!
பிணியாம் பவமழிக்கும் பெம்மானாம் கங்கை
அணிஅரன்மே(வு) ஆரூர் அடை.

3 comments:

Geetha Sambasivam said...

துணியாம் பிறையினைச்= இந்தத் துணியாம் "துணிவு" என்பதில் வரும் துணிவைச் சுட்டுகிறதா??

Thangamani said...

//துணியாம் பிறையினைச்= இந்தத் துணியாம் "துணிவு"
என்பதில் வரும் துணிவைச் சுட்டுகிறதா??//

துணி=துண்டு,துண்டம்

பிறைத் துண்டை சடையில் சூடியவன் என்னும் பொருள்
கொள்ள வேண்டும்.

கீதா!உங்களின் கருத்துரைகளுக்கு
என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

ஓஹோ, இந்தக் கருத்து சற்றுப் புதியது அம்மா, நன்றி.