Wednesday, February 17, 2010

ஆரூர் அடை நெஞ்சே!-- 2.

மின்னல் நிகராம் மிடியுடை வாழ்விதில்
பொன்னில் புனைகழல் பூம்பதம் உன்னுக!
தன்னன்பால் யாவும் தடுத்தருள் செய்கிற
அன்பன்மே(வு) ஆரூர் அடை.

சித்தம் தெளிவாக்கும் செம்மை மருந்தவன்
சுத்தி வருவினைச் சுற்றறச் செய்பவன்
நித்தம் அருளால் நிறைந்திடும் என்னெஞ்சே!
அத்தன்மே(வு) ஆரூர் அடை.

1 comment:

Geetha Sambasivam said...

ஆரூர் பற்றித் தான் இப்போ எழுத ஆரம்பிச்சிருக்கேன், நல்ல பாடல், நன்றி அம்மா.