
கண்ணனுக்குத் தாசனவன் கற்பனையில் சொற்புனைவில்
...கவியுணரும் தத்துவத்தில் கவிவெல்லும்!
எண்ணமதில் நீங்காத இடம்பிடித்த வரலாறாய்
...எழுத்திலுயர் கல்கியைநாம் மறப்போமா ?
வண்ணமுறு சித்திரங்கள் வரைந்தஉயர் ஓவியர்கள்
...வாழ்கின்ற நாடிதென்று பெருமைகொள்வோம் !
தண்ணமுதத் தமிழ்பாடும் தண்டபாணித் தேசிகரின்
...செம்மைகுரல் பண்ணிசையில் மயங்கார்யார்!


2 comments:
ஆகா, அருமையான வாழ்த்துப்பா.
உயர் கலைஞர்களுக்கு உன்னதமான பாமாலை.
அன்புள்ள ஜீவா!
புத்தாண்டு வாழ்த்துகள்!
பாராட்டுக்கு நன்றி!ஜீவா!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment