மீனாட்சித் தாயவள் மீதுயர்ந்த பிள்ளைதமிழ்
தேனார்செந் தமிழினில் தெய்வமகன் பாடுகின்றான்!
குமரகுரு பரர்பாடல் குழந்தைமீனாள் வந்துகேட்டாள்
அமுதமொழி கவிசுவைக்க அமர்ந்தாளே கொலுவினிலே!
அரசனின் முத்தாரம் அன்பனுக்கே அணிவித்தாள்!
பரவசமாய்க் குருபரனைப் பாரேத்தச் செய்தனளே!
தெய்வீகத் தமிழ்மொழியில் திருக்கதவம் தாள்திறக்கும்!
தேயாதபவுர்ணமியாய் தேசாகும் அமாவாசை!
மெய்யாக மனந்தோய்ந்து வண்டமிழில் சொல்லெடுத்தால்
செய்கின்ற செயலினுக்குத் தெய்வீகம் கைகொடுக்கும்!
தேவாரம் திருப்புகழ் திருஓங்கும் பிரபந்தம்
நாவார இசைத்திடுவோம் நம்பிக்கை கொண்டிடுவோம்!
வயசு கோளாறு
1 year ago
2 comments:
அமுதமொழி கவிசுவைக்க «Á÷ó¾¡§Ç கொலுவினிலே!//
வார்த்தை விட்டிருக்கோ???
//அமுதமொழி கவிசுவைக்க «Á÷ó¾¡§Ç கொலுவினிலே!//
//வார்த்தை விட்டிருக்கோ???//
சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
மிக்க நன்றி!கீதா!
கோப்பில் நான் முதலில் எழுதியது:
//குமரகுரு பரர்பாடல் குழந்தைமீனாள் வந்துகேட்டாள்
கொலுசொலியும் கொஞ்சிடவே கொலுவினில் அமர்ந்தாளே!//
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment