Tuesday, January 31, 2012

திருவேடகம்!--3

ஆரா இன்னமுதே அழ லாயொளிர் செம்மலையே
காரார் மேகமெனக் கனி வாகும் அருள்மழையே
தாரார் தோளுடையாய் தருக் கீழமர் சற்குருவே
சீரார் கின்றபதி திரு ஏடக மேயவனே....5

பையார் நச்சரவைப் பரி வாக அணிபவனை
மையார் கண்ணியுமை மண வாளனை மாதவனைக்
கையால் தூமலர்பொற் கழல் தூவியெம் அங்கணனே
செய்யா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே....6

1 comment:

Geetha Sambasivam said...

தருக் கீழமர் சற்குருவே //

சற்குரு தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி.