Monday, January 16, 2012

சிராப்பள்ளிச்சிவன் தன்னைச்சிந்தி!-- 2

வான்தங்கு முகிலினம்பெய் மழையா னானை
...வண்மைமிகு தயையினிலே வாழ்விப் பானைக்
கான்தங்குத் தீயாடும் கழலன் தன்னைக்
...கண்டுவக்கும் அடியார்க்குக் கண்ணா னானை
ஊன்தங்கு முயிர்தன்னில் உயிர்ப்பா னானை
...உற்றிடுமோர் புகலாக உதவு வானைத்
தேன்தங்கு கொன்றையுடன் திங்கள் சூடும்
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....3

பூவைஉமா தேவியினைப் புடைவைத் தானைப்
....பொன்னவனை அங்கணனைப் பூசிப் போரின்
நோவையிலா தருள்செய்யும் நுதல்கண் ணானின்
....நூறுபத்து பெயரினையே நுவன்று போற்றும்
நாவையலால் வெறிதரற்றும் நாவை வேண்டா
...நயனுடைய அடியாரின் நாதன் தன்னை
சேவையெலாம் எளியர்க்காய்ச் செய்தல் வேட்கும்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....4

4 comments:

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Thangamani said...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
மிக்கநன்றி ரிஷ்வன்!
உங்கள் வலைப்பூவை வந்து பார்க்கிறேன்.நன்றி!

சென்னை பித்தன் said...

ஓம் நமச்சிவாய.அருமையான கவிதை

Geetha Sambasivam said...

பூவைஉமா தேவியினைப் புடைவைத் தானைப் //

இங்கே புடை வைத்தானை என்பது உடலில் உமைக்கு ஒரு பாகம் கொடுத்ததைக் குறிப்பது தானே?