சந்தமுறு திருமறையில் தமிழா .னானை
...சஞ்சலங்கள் தீர்ப்பவனை தனிய ளான
வந்தியவள் கூலியாக வந்த போது
...மன்னன்கைத் தடிவீச வலிகொண் டானை
சுந்தரரின் தோழனெனத் தூதா .னானை
....தொண்டருளம் கண்டருளும் துய்யத் தேவை
சிந்தையினில் நின்றவனைத் திருநீற் றானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....5
ஓங்கழலாய் உயர்ந்தொளிரும் ஒருவன் தன்னை
...உற்றிடுமோர் துணைவனென உள்கு வாரைத்
தாங்குகிற அருள்நிதியைத் தம்பி ரானைச்
...சந்ததமும் அன்பருளம் தங்கு வானைப்
பூங்கழலன் திருநடனம் போற்று கின்ற
...புண்ணியராம் அடியார்க்குப் புகலாய் நின்று
தேங்குமன்பில் நிறைவானை சேயூர் வானை
...சிராப்பள்ளிச் சிவன்தன்னைச் சிந்தி நெஞ்சே!....6
உள்கு=நினை.
வயசு கோளாறு
1 year ago
1 comment:
மதுரை, திருஆரூர், சிதம்பரம், திருவண்ணாமலை எல்லாத் தரிசனங்களும் இந்தப் பாடலில் கண்டு மகிழ்ந்தேன்.
Post a Comment