திருவேடகம்
---------------------
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
(மா + கூவிளங்காய் + நிரை + கூவிளம்-கூவிளங்காய் / தேமா-கருவிளங்காய்)
அடியின் முதற்சீர் நெடிலில் முடியும்;
மூன்றாவதாக வரும் நிரைச்சீரில் நெடில் இராது;
4-5 சீர்களிடை வெண்டளை பயிலும்;
அடியின் ஈற்றுச் சீரின் முதல் அசையில் நெடிலோ ஒற்றோ வரும்.
(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து")
குறிப்பு: பின்வரும் பாடல்களுள் சில ஈசனை முன்னிலையிலும், சில படர்க்கையிலும்
பாடுவன.
(சிவசிவா நன்றி!)
தேவா தீஞ்சுடரே சிவ சுந்தரத் தெள்ளமுதே
நோவா கின்றவினை நொறுங் கச்செயு நுண்மையனே
ஓவா துன் துணையே உறத் தந்தருள் ஒண்பொருளே
சேவார் வெல்கொடியாய் திரு ஏடக மேயவனே....1
மூவா முன்னவனே முழு தாகிய மூலவனே
காவா என்றவுடன் கனிந் தேயருள் செய்திடவே
மாவாம் சேவமர்ந்து மலைப் பெண்ணுடன் வந்தருள்வாய்
தேவா சிற்பரனே திரு ஏடக மேயவனே....2
வயசு கோளாறு
1 year ago
5 comments:
மிக அருமை !
கவியழகு பருகினேன். கூகிள் ரீடரில் சேர்த்துக் கொள்வேன். நன்றி!
கூடல்பாலா!தங்கள் வருகைக்கும்,
பாராட்டுக்கும் மிக்கநன்றி!
அனுஜா, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி!
திருவேடகம் மறுபடியும் போக ஆசை வருது.
Post a Comment