Friday, June 21, 2013

திருச்சிராப்பள்ளி--1

 (கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

பாவல் நாவலர் பாடிப் பரவிடும்
தேவ .னைத்தொழு தேயடை நெஞ்சமே
கோவில் நெஞ்சினில் கொண்ட அன்பரின்
சேவ மர்பதி தென்சிராப் பள்ளியே. ...1

 பாவென் றந்தமிழ்ப் பாடலைப் பாடியே
தாவென் றால்தரும் தாளடை நெஞ்சமே
நோவென் றேவரும் நொய்வினைத் தீர்க்கும்
தேவன் மேவிய தென்சிராப் பள்ளியே....2

கேட தைச்செய் கெடுவினை நீங்கிட
ஆட கத்தாள் அடையஎண் நெஞ்சமே
நாட கன் தருக் கீழ்மறை ஓதிய
சேடன் மேவிய தென்சிராப் பள்ளியே....3

குலையும் வண்ணம் கொடுந்துயர் செய்வினை
இலையென் றேகிட எண்ணிசெல் நெஞ்சமே
கலைமிகு மஞ்சார் கவினுறு வெண்பனிச்
சிலையன் மேவிய தென்சிராப் பள்ளியே....4

 கன்னல் வில்லினன் காமனைக் காய்ந்தவன்
பொன்ன லர்த்தாள் புகலடை நெஞ்சமே
என்ன துன்பிலும் இன்னருள் செய்பவன்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே....5

6 comments:

தி.தமிழ் இளங்கோ said...

// என்ன துன்பிலும் இன்னருள் செய்பவன்
தென்னன் மேவிய தென்சிராப் பள்ளியே //

சென்று வணங்குவோம், தென் சிராப்பள்ளியை!

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் வலைப்பதிவினை தமிழ்மணத்தில் இணைப்பதற்கும், தமிழ்மணம் ஓட்டுப்பட்டையைக் கொண்டுவரவும், உங்கள் வலைப்பதிவு, blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாறவேண்டும். திரு. சசிகுமார் அவர்களின் “வந்தேமாதரம்” வலையின் ”பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி “ www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html என்ற கட்டுரையில் எளிமையான வழிமுறை ஒன்றைச் சொல்லி இருக்கிறார். எளிமையான இந்த வழிமுறையைச் செய்தால் தாங்கள் உங்கள் பதிவை தமிழ் மணத்தில் இணைக்கலாம். பதிவில் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையும் வந்துவிடும். நானும் எனது பதிவில் அந்த முறையத்தான் செய்துள்ளேன். பிரச்சினை எதுவும் இல்லை.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

நல்ல கலிவிருத்த நற்றேனை நான்பருகி
வல்ல கவியாய் வளமுற்றேன்! - சொல்லச்
சுவைக்கும் சுடா்தமிழைச் சூட்டுக! என்றன்
செவிக்கும் விழிக்கும் சிறப்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

தி.தமிழ் இளங்கோ said...

இன்றைய தமிழ் மணத்தில் தங்கள் பதிவைக் கண்டேன். உங்கள் வலைப்பதிவு முகவரியில் எந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே தமிழ்மணத்தில் இணைத்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

Thangamani said...

திரு.தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
முன்பே தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டேன்.
ஏனோ சரியாக வேலைசெய்யவில்லை என்று
விட்டுவிட்டேன்.இப்போது சரியாக இயங்குகிறது.
மிக்கநன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.
வந்தேமாதரம் வலைப்பூவையும் பார்க்கிறேன்.நன்றி.

Thangamani said...

கவிஞர் திரு.கி.பாரதிதாசன் அவர்களுக்கு,
வெண்பாவில் மனமகிழ்ந்தேன்.
மிக்கநன்றி.

அன்புடன்,
தங்கமணி.