Tuesday, June 25, 2013

திருச்சிராப்பள்ளி-2

பூத்த நாண்மலர்ப் பொற்கொன் றையணிவான்
சீர்த்த நற்றாள் தெளிந்தடை நெஞ்சமே
ஆர்த்த லைத்திழி ஆற்றைச் சடைக்கொளும்
தீர்த்தன் மேவிய தென்சிராப் பள்ளியே....6

வல்வி .னைத்துயர் மாய்ந்திட வேண்டியே
நல்வி தம்தொழ நத்திடு நெஞ்சமே
அல்லி ருட்தழல் ஆடுவான் ஆலமர்
செல்வன் மேவிய தென்சிராப் பள்ளியே....7

இட்ட மாயமர்ந் தின் தமிழ் மாந்துவன்
நட்டம் செய்கழல் நத்திடு நெஞ்சமே
சுட்ட நீறணித் துய்யன் தண்ணருட்
சிட்டன் மேவிய தென்சிராப் பள்ளியே....8

பேய வள்பெரும் பேறுடை அன்பினள்
தாயென் றானைச் சரணடை நெஞ்சமே
தூயன் தாள்முடி தோன்றா(து) உயர்ந்திடும்
தீயன் மேவிய தென்சிராப் பள்ளியே....9

மெய்யில் பங்குடை மீன்விழி யாளுமை
ஐயன் பூந்தாள் அடையஎண் நெஞ்சமே
கையில் மான்மழு தீயுடன் காத்தருட்
செய்யன் மேவிய தென்சிராப் பள்ளியே....10

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா... வாழ்த்துக்கள்...

உங்கள் தளம் (.in) ஆக இருப்பதால் தமிழ்மணம் இணைக்க முடிவதில்லை... நேரம் கிடைப்பின் தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com

அம்பாளடியாள் said...

மிகவும் அருமையாக உள்ளது
கவிதை .இவ்வாறு கவிதை எழுதுவதற்கு நிறைய அனுபவங்கள் தேவை !! மிக்க நன்றி அம்மா
பகிர்வுக்கு .

Thangamani said...

மிக்கநன்றி தனபாலன்.
தமிழ்மணத்தில் இட்ட என்பதிவு வந்துள்ளதே.
உங்கள் முயற்சிக்கு நன்றி.

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

மிக்கநன்றி அம்பாள் அடியாள்.
(பூவோடு சேர்ந்த)வெறும்நார் நான்.
சிவசிவா என்னும் சிறந்தகவிஞர்.அவருடைய ஈற்றடியை
வைத்து எழுதுகிறேன்.(சந்தவசந்தக்குழுவில்)
நிறையத்தவறுகள் செய்து திருத்தங்கள்கண்டு இயற்றுகிறேன்.
இன்னும் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.
அன்புடன்,
தங்கமணி.

viyasan said...

"இட்ட மாயமர்ந் தின் தமிழ் மாந்துவன்
நட்டம் செய்கழல் நத்திடு நெஞ்சமே"

ஒவ்வொரு வரியிலும் பக்திரசம் சொட்டுகிறது. நன்றிகள் அம்மா.

Thangamani said...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
மிக்கநன்றி வியாசன்.