(சந்தக்
கலிவிருத்தம் -
"தனதன
தனதன தனதன தனதன".முதற்சீர்
'தானன'
என்ற
சந்தத்திலும் சில பாடல்களில்
வரலாம்.பாடல்தோறும்
ஈற்றுச்சீர் 'தனனா'.
திருவிராகம்
அமைப்பு.
முடுகு
ஓசை அமைந்த பாடல்கள்.)
குணமுளன் உருகிடும் அடியரின் துணையவன்
நிணமுறு கலமுடன் பலிபெற அலைபவன்
தணலெரி கடமுடை தனியனின் உறைவிடம்
மணமலர் மலிபொழில் அணிதிரு வலமே....1
சதுரனாய் உலகுய முறைசெயும் கதியவன்
பதுமையென் றசைவுறும் படிச்செயும் இறையவன்
முதுமையில் பிணியினில் அருளரன் உறைவிடம்
மதுமலர் மலிபொழில் அணிதிரு வலமே....2
பதுமையென் றசைவுறும் படிச்செயும் இறையவன்
முதுமையில் பிணியினில் அருளரன் உறைவிடம்
மதுமலர் மலிபொழில் அணிதிரு வலமே....2
4 comments:
தனனா சந்தத்தில் அருமை அம்மா... நன்றி...
திருவலம் திருத்தலம் பற்றி
அழகிய சந்தத்தில்
அருமையான பகிர்வுகள்.
.பாராட்டுக்கள்..
அன்புள்ள தனபாலன்,
சிவசிவாவின் பாடலின் ஈற்றடியை வைத்துக்கொண்டு
நான் முயலுகின்றேன்.அவருக்கு என்நன்றி.
உங்கள் பாராட்டுக்கு என்மகிழ்ச்சியான நன்றி.
அன்புள்ள ராஜேஸ்வரி,
உங்கள் பாராட்டுக்கு என்மகிழ்ச்சியான நன்றி.
Post a Comment