சிந்திக்கும் சிந்தையுள் தேசா வானைச்
...சீர்மல்கும் பேரானை செம்மல் தன்னை
விந்தைக்குள் விந்தைதரும் வேடம் மேவி
...வேணவிதம் அருள்செய்யும் விமலன் தன்னைச்...சீர்மல்கும் பேரானை செம்மல் தன்னை
விந்தைக்குள் விந்தைதரும் வேடம் மேவி
சந்தத்தில் மலர்கின்ற தமிழா னானைச்
...சங்கரனை நாவலூரர் சாற்றிப் பாட்டால்
வந்திக்கும் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....5
எழுவானில் உயர்தீயாய் இலங்கு வானை
....எளியோரின் அருள்நிதியாய் இரங்கு வானை
வழுவாத அன்பினுக்கு மகிழும் தேவை
....மலைமகளின் கேள்வனை மன்றன் தன்னைத்
தொழுவாரின் துயர்தீர்க்கும் துணையா வானைச்
....சுந்தரர்க்குத் தூதுசென்றத் தூயோன் தன்னை
மழுவானை மழபாடி வயிரத் தூனை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....6
மன்றன்=சிவன்
No comments:
Post a Comment