Friday, November 9, 2012

மழபாடி வயிரத்தூண்-- 2

ஆர்வருவார் ஆர்செல்வார் அறிவார் யாரே
....ஆரமுதாம் நஞ்சுண்டன் அனைத்தும் உய்ப்பான்
கார்முகிலாய்ப் பொழிகின்ற கருணை வெள்ளம்
....கழல்பற்றி அருள்வேண்டின் கதியா வானைப்
பார்முதலாம் கண்ணுதலை பலித்தேர் வானைப்
....பரிந்துயிர்க்காய் ஆடுவானைப் பண்ணார் வண்டு
வார்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....3
 
மின்னலிடை உமையவளை மெய்யில் பங்காய்
....மேவியவன் துணைதன்னை வேண்டும் அன்பர்
பொன்னவனை நாண்மலரால்  புனைந்துப் போற்றிப்
....பூசிக்கும் பூசனையில் பொலிகின் றானை
இன்னமுதென் றாலமுண்ட ஈசன் தன்னை
....இணையில்லாச் செல்வமென இலங்கு வானை
மன்னவனை மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....4

2 comments:

Geetha Sambasivam said...

வணங்கிக்கறேன்.

Thangamani said...

ரெண்டுமாசம் கழிச்சு இப்பொதான் பாத்தேன்.
தாமதத்திற்கு மன்னிக்கணும்.பாராட்டுக்கு மகிழ்ச்சி.
அன்புடன்,
தங்கமணி.