Tuesday, November 27, 2012

திருக்கானூர்--- 1

திருக்கானூர்
----------------------------
(
அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)
திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.

 தளைத்து வினைசெய் யிடர்தீர்க்கும்
...சடையன் செந்தாள் மலர்பற்றிக்
களத்தில் விடத்தைக் கொண்டருளும்
...கதியே எனநீ  அடைநெஞ்சே
தளத்தில் வெளியில் நடம்செய்யும்
...தனியன் புரத்தை நகையாலே
கொளுத்தும் ஈசன் உறைகோவில்
...கொள்ளி  டஞ்சூழ் கானூரே....1

தளம்=மேடை, வெளி=ஆகாசம்.
களம்=தொண்டை.
தனியன்=ஒப்பில்லாதவன்.

இறைவன் ஈசன் என்றுணர்ந்து
....ஏத்திப் பணியும் அன்பர்க்கு
நிறைவைத் தருமே நிமலன் தாள்
....நினைந்து அடைநீ மடநெஞ்சே
நறைசேர் மலரால்  நன்மாலை
....நயமாய்ச் சூடும் நம்பனவன்
குறைகள் தீர்ப்பான் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....2

நறை=தேன்.

3 comments:

Geetha Sambasivam said...

திருக்கானூர், கேட்டதில்லை, கொள்ளிடக்கரையிலா? வடகரையில் இருக்குமோ?

Thangamani said...

அன்பு கீதா,
உங்கள் வரவுக்கு மிக்கநன்றி
உங்கள்பின்னூட்டங்களை படிக்கிறேன்.
மகிழ்ச்சி.
உடல்நலை சரியில்லாததால் கணினியில்
உட்காருவதில்லை.முடியவில்லை.
இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.

Thangamani said...

அன்பு கீதா,
உங்கள் வரவுக்கு மிக்கநன்றி
உங்கள்பின்னூட்டங்களை படிக்கிறேன்.
மகிழ்ச்சி.
உடல்நலை சரியில்லாததால் கணினியில்
உட்காருவதில்லை.முடியவில்லை.
இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.