Monday, June 25, 2012

ஊன்றாப்பு (Uentrop)

Kamakshi temple in Hamm-Uentrop in Germany (http://kamadchiampal.com/index.php?Itemid=191)

(கலிவிருத்தம்? 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")
(சம்பந்தரின் இப்பதிகத்தில் பொதுவாக 'மா தேமா புளிமா புளிமாங்காய்' என்றவாய்பாடு.


இலக்கணக் குறிப்புகள்:
ன்+த = 'ன்ற' என்று திரியும்.
ல்+ம = 'ன்ம' என்று திரியும்.


வான்த வழ்வெண் மதியன் செஞ்சடையன்
கான்த .னில்செங் கனலில் நட்டமிடும்
கோன்தன் கழலை கும்பிட் டன்பினில்சேர்
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....1


கூன்பி றையுடன் குதித்துப் பாய்நதியும்
தான்றன் சிரசில் தரித்த செய்யவனை
நான்ம றையும் நாடும் புண்ணியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....2


தேன்றாங் கலர்கள் திகழ அணிவானை
தோன்றாத் துணையாய்த் துதிப்போர்க் கருள்வானை
ஊன்றாங் குயிரில் ஒளியாய் இருப்பானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....3

வான்போல் பொழியும் வண்மை கொண்டவனை
ஆன்மேல் அமரும் ஐயனை எழில்மேவ
மூன்றாய்த் திகழும் முக்கட் சோதியனை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....4


தேன்வார்க் கும்பா செவியேற் கின்றானை
நான்காம் மறைகள் நவிலும் கழலானை
நோன்றார் மனத்தில் நுவலஞ் செழுத்தானை
ஊன்றாப் பரனை ஓதி உய்ம்மனமே....5

2 comments:

Geetha Sambasivam said...

A search of dictionary entry words for ஊன்றாப்பு did not locate any occurrences.//

ஊன்றாப்புக்குப் பொருள் தேடினால் கிடைக்கவில்லை. ஊன்றாப்பு என்றால் என்னனு கொஞ்சம் விளக்க முடியுமா அம்மா?

Thangamani said...

ஜெர்மெனியில் 'ஊன்றாப்பு'என்னும் ஊரில் இருக்கும்
கோவிலிலுள்ள சிவனைக் குறித்துப் பாடல் சிவசிவா இயற்றினார்.
அதையொட்டி நான் எழுதிய பாடல்.