5)
துண்டப் பிறையும் விண்ணின் நதியும் துலங்கும் அணியாகக்
கண்டு நிகர்த்த மொழியாள் உமையின் காந்தன் நடம்செய்தாள்
செண்டு மலர்த்தார் சூட்டி அடியார் சிந்தை குளிரும்தாள்
அண்டம் எல்லாம் கடந்து நின்ற ஆரூர் அரன் தாளே.
6)
கன்றிச் சிவக்கத் தெருவில் விறகுக் கட்டைச் சுமக்கும்தாள்
தொன்று கைலையில் அம்மை பாடத் தூக்கி நடம்செய்தாள்
மன்றில் சக்தி நாணும் படியே வாகாய் உயர்பொற்றாள்
அன்று தூதாய் நண்பர்க் கலைந்த ஆரூர் அரன் தாளே.
வயசு கோளாறு
1 year ago
2 comments:
பிட்டுக்கு மண் சுமந்து, காளியோடு நடனம் ஆடி, சுந்தரர்க்கு தூது சென்று...எல்லாம் கண் முன்னே விரிந்தது.
திருவாரூர், உலகம், அறிவியல், தொழில் நுட்பம், ஆரோக்கியம் மற்றும் சமயல் தொடர்பான செய்திகளுக்கு
திருவாரூர் செய்திகள்
Post a Comment