3)
என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தனும்செஞ் சடையன் தொழும்தண்தாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே.
4)
பாவை புனித வதியாம் அம்மை பற்றிப் பரவும்தாள்
கோவை கைலை வெற்பில் ஆடல் குறித்தே பணியும்தாள்
நாவை பழக்கி அஞ்சக் கரத்தை நவில வினைசெய்நோய்
யாவை யும்தீர்த் தருளும் செல்வன் ஆரூர் அரன் தாளே.
வயசு கோளாறு
1 year ago
1 comment:
என்பும் பெண்ணாய்க் குடத்துள் ளிருந்து எழவே பதிகத்தால்
சம்பு மகிழ சம்பந் தனும்செஞ் சடையன் தொழும்தண்தாள்
துன்ப வினையைத் தீர்க்கும் செந்தாள் தூதாய் நடக்கும்தாள்
அன்பர் நெஞ்சை அகலா திருக்கும் ஆரூர் அரன் தாளே. //
இரண்டாம் முறை 3-ஆம் பாடல் எனக் குறிப்பிட்டு வந்துள்ளதே? கவனக்குறைவில்லை என நம்புகிறேன்.
Post a Comment