Wednesday, November 18, 2009

அவர் நமர் !

சிவமய மாகத் திகழுருக் கொண்டே
கவருறக் கொல்லக் கருதிடு வோனை
சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்
அவர்நமர் என்பார் அருள்நினை மனமே!

(மெய்ப்பொருள் நாயனார் தன்னைக் கொல்லவந்த பகைவன் முத்தநாதனுக்கும் அருள்செய்தது)

1 comment:

Thangamani said...

சிவமயமாகத் திகழுரு=உருத்திராக்கம்,வெண்ணீறு தரித்துச் சிவமாகத் திகழ்கின்ற வேடம்

கவர் உறக் கொல்லக் கருதிடுவோன்=வஞ்சகமாகக் கொன்றுவிடும் எண்ணமுடையோனை
கவர்=வஞ்சகம்
கவர்=வஞ்சகம்
சிவனவன் என்றே கருதிடிடும் மெய்யன்=சிவனாகவே பாவிக்கும் மெய்ப் பொருள்நாயனார்.

அன்புடன்,
தங்கமணி.