திரு.பசுபதி அவர்கள், புலவர்.குழந்தை அவர்களின் ஈற்றடியை வைத்து
ஓர் ஒன்பதின் சீரடி விருத்தம் இயற்ற,பயிற்சியாகக் கொடுத்தார். அதற்கு நான் இயற்றிய விருத்தம் இது.
குடிபடை வீரம் காதல்
..குடிகொளும் பக்தி நேயம்
...கொண்டிடும் பாங்கு சாற்றும்
படிபுகழ் காவி யங்கள்
..பனுவலின் உன்ன தங்கள்
...பைந்தமிழ்ப் பாவ ளங்கள்
பொடியணி ஈச னாரும்
..புனிதமாம் சங்க மாய்ந்த
...பொற்பெனப் பல்வி தத்தில்
முடியுடை மூவர் செங்கோல்
..முறையினிற் போற்றிக் காத்த
...முத்தமிழ் வாழ்க மாதோ!
8 comments:
அம்மையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
உங்கள் பாடல்கள் மிக நன்று. நான் அதிகம் வலைப்பூக்கள் பக்கம் வருவதில்லை. நல்ல மரபுத் தமிழைத் தேடி எடுக்க வேண்டி இருக்கிறது.
மரபெழுத வயது ஒரு தடையா? இல்லவே இல்லை. ஐந்திலும் எழுதலாம், ஐம்பதிலும் எழுதலாம் என்று நிரூபணம்.
அன்பன்
இராஜ.தியாகராஜன்
www.pudhucherry.com
www.tyagas.wordpress.com
www.thamizhmozhi.blogspot.com
திரு ராஜ. தியாகராஜன் சொல்லுவது முற்றிலும் சரி. அருமையான முயற்சி அம்மா.
அன்புள்ள இராஜ. தியாகராஜன்!
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்.
உங்களைப் போன்ற இளைஞர்களின் உழைப்பும்,ஈடுபாடும்
தமிழுலகத்திற்கு பெருத்த வளத்தையும்,மேன்மையையும்
அளிக்கிறன்றன என்பதில் ஐயமில்லை.
இளைஞர்களே!வருக!தமிழ்தழைக்கத் தருக!!
வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள கீதா!
உங்கள் கருத்துக்கு என்பணிவான நன்றி!
வாழ்த்துகள்!தமிழுக்கு உங்கள் சேவை பெரிதும் தேவை!
தொடரட்டும் உங்கள் பணி!!
அன்புடன்,
தங்கமணி.
அருமையான படம் அம்மா, பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கிறது. வேறு பார்க்கத் தோன்றவில்லை. நன்றி.
மிக்க நன்றி!கீதா!
என் நாட்டுப் பெண் அகிலா இந்த இமேஜை(படத்தை)
இப்பாடலுக்கு இட்டாள்.அவள் பார்த்தால் மகிழ்வாள்.
அன்புடன்,
தங்கமணி.
தமிழில் இனிமை மகிழ்வால் நெஞ்சை
நிறைக்கிறது.
உங்கள் புலமைக்கும் திறமைக்கும் என்
இனிய நல் வாழ்த்துகள்.
அன்புள்ள அப்துல் ஜப்பார்!
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment