Friday, July 5, 2013

திருநெடுங்களம்---5

வரியதள் உடுத்துவெண் மதிநதி யோடு
...மணமலர்க் கொன்றையைச் சூடிய முடியும்
எரியழல் கானதில் இணையிலா ஆடல்
...ஈர்ப்புடன் ஆடிடும் இன்னருட் தாளும்
அரியயன் அலைந்துமே அடைந்திடா வண்ணம்
...அழலென உயர்ந்தயெம் அதிசய மான
அரியனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....9

 கீற்றென வெண்பிறை சூடிடும் சிவனே
...கெடுவினை தருதுயர் தீர்த்திடு முன்னைச்
சாற்றியே 'அருள்கஎம் சங்கரா' என்று
...தாளினைப் பிடித்தழும் பத்தனைக் காக்கச்
சீற்றமோ டெமனைசெங் கழலினால் உதைத்தச்
...செய்யனே சடைதனில் திகழ்தரும் கங்கை
ஆற்றனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நலமுற அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அம்மா...

நன்றி... வாழ்த்துக்கள்...

Thangamani said...

வருகைக்கும்,உங்கள் வேண்டுதலுக்கும்
நன்றி தனபாலன்.

தி.தமிழ் இளங்கோ said...

கீற்றென வெண்பிறை சூடிடும் சிவனின் அருள் எல்லோருக்கும் பாலிக்கட்டும்!
தாங்கள் ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றியும் சொல்லும்போது அந்த ஊர் எவ்விடத்தில் உள்ளது என்று ஒரு சிறுகுறிப்பு தந்தால்
நன்றாக இருக்கும்.

Thangamani said...

தி தமிழ் இளங்கோ அவர்களுக்கு
தங்கள் கருத்துக்கு மிக்கநன்றி.
திருநெடுங்களம் தலம்பற்றி தமிழ்களஞ்சியம்.காம்,
சைவம்.காம் என்னும் இணைப்பில் காணலாம்.
நான் ஒருசில தலங்களே கண்டுள்ளேன்.
கோவில் செல்லாமலே கற்பனையில் எழுதுகிறேன்.
திருசிவசிவாவின் ஈற்றடிக்கு எழுதுகிறேன்.