Monday, July 1, 2013

திருநெடுங்களம்-- 3

கண்ணியென் றிளம்பிறை கவினுறத் தோன்றக்
...கங்கையும் உடன் திகழ் கற்றைவார் சடையா
புண்ணிய .னேஉன பொற்கழல் தன்னைப்
...போற்றிடும் அடியவர்ப் புகலென நின்றுப்
பண்ணிசைத் தீந்தமிழ்ப் பாக்களைக் கேட்டே
..பரிவுடன் அன்பரைப் பார்த்தருள் புரியும்
அண்ணலே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....5

அழலென ஓங்கிய அண்ணலே அயன்மால்
...அறியவும் முடிந்திடா அடிமுடி யோனே
நிழலென எமைவினை நெரித்திடர் படுத்தும்
...நிமலனே துன்பினை நீங்கிடச் செய்வாய்
கழலிடு நடமதில் கனிந்துமே அம்மை
...காணவும் இசைக்கவும் அருளிய எங்கள்
அழகனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும்  நெடுங்களத் தரனே....6

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமையான வரிகள் அம்மா...

வாழ்த்துக்கள்...

Thangamani said...

நீங்கள் பாடலைப் படித்துக்கருத்து சொன்னதற்கு
மகிழ்ச்சியுடன் நன்றி.