Sunday, July 14, 2013

திருவீழிமிழலை---2

6)
கூன்பிறை பாம்பொடு குதியலை சூடியே
தேன்பொழில் மிழலையு ளீரே
தேன்பொழில் மிழலையு ளீரும கழல்தொழ
ஊன்பிறப் பிலாநிலை உறுமே.
7)
ஊர்விடை அமர்ந்தவ உமையோர் பங்க,வான்
ஆர்பொழில் மிழலையு ளீரே
ஆர்பொழில் மிழலையுளீ ரும கழல்தொழ
தீர்வுறும் வினையிடர் திடமே.
8)
சாம்பலை மேனியில் தரித்தருள் தந்திடும்
தீம்பொழில் மிழலையு ளீரே
தீம்பொழில் மிழலையு ளீருமை தொழஎமை
நோம்படி செய்யிடர் நோமே.
9)
போதமும் மோனமாய் புரிந்தருள் தருகிற
கோதறு மிழலையு ளீரே
கோதறு மிழலையு ளீரும தடிதொழ
தீதறும் வளமுறும் திடனே.
10)
அக்கர மைந்தினை அடியவர் ஓதவும்
திக்கருள் மிழலையு ளீரே
திக்கரு மிழலையு ளீருமை நினைபவர்
தக்கநல் வாழ்வுறல் சதமே.

திக்கு=ஆதரவு.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடித்ததும் மீண்டும் தொடக்கமும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

Thangamani said...

கருத்துக்கு மிக்கநன்றி தனபாலன்.

Anonymous said...

வணக்கம்
அம்மா
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thangamani said...

மிக்கநன்றி ரூபன்.