Thursday, July 11, 2013

திருவீழிமிழலை---1

(திருமுக்கால் அமைப்பில். 1, 3-ஆம் அடிகள் அளவடி. 2, 4-ஆம் அடிகள் சிந்தடி. இடைமடக்கு அமைந்து வரும்.
4
விளம்
2
விளம் + மா
4
விளம்
2
விளம் + மா)

1)
விரிமரை கொடுஅரி தாள்தொழ அடைபதி
திரிமுகில் மிழலையு ளீரே
திரிமுகில் மிழலையு ளீருமை விழைபவர்
புரிவினை தீருமப் போதே.
2)
நரைவிடை யீருமை  அரிதொழ அடைபதி
திரைநதி மிழலையு ளீரே
திரைநதி மிழலையு ளீருமை மேவுவார்
புரைவினை விலகுமப் போதே.

புரைவினை=பாவவினை.
3)
தெறிவிழி மலர்கொடு தொழவரி அடைபதி
வெறிகமழ் மிழலையு ளீரே
வெறிகமழ் மிழலையு ளீருமை நினைபவர்
செறிவினை விலகியே செலுமே.
4)
எண்ணிட நிறைமலர் விழிகொடு அடைபதி
தண்ணெழில் மிழலையு  ளீரே
தண்ணெழில் மிழலையு ளீருமை நினைந்திட
நண்ணிய இடரிலை நலமே.
5)
படியினை அடியவர் பசியற அருளிய
படிபுகழ் மிழலையு ளீரே
படிபுகழ் மிழலையு ளீருமை எண்ணிடில்
பொடிபட இடர்வினை போமே.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள் அம்மா... வாழ்த்துக்கள்...

Thangamani said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி தனபாலன்.