Monday, April 2, 2012

ஆரூர் அரன்தாள் (திருவாரூர்) --5

9)
பரியும் தயையின் திறத்தை அன்பர் பாடி வணங்கும்தாள்
திரியும் நிலையில் பலியைத் தேரத் தினமும் அலையும்தாள்
விரியும் வெளியில் நடனம் ஆடி விந்தை புரியும்தாள்
அரியும் அயனும் அடைதற் கரிய ஆரூர் அரன் தாளே.
10)
தையல் உமையை இடது பங்கில் தாங்கி அருள்வான் தாள்
கையில் சூலம் மழுதீ யோடு கலைமான் உடையான் தாள்
மெய்யில் நீறு பூசும் அடியார் வேண்டித் தொழும்நற்றாள்
ஐயம் ஏற்க ஊரூர் நடக்கும் ஆரூர் அரன் தாளே.

1 comment:

Geetha Sambasivam said...

ஐயம் ஏற்க ஊரூர் நடக்கும் ஆரூர் அரன் தாளே//

எனக்கு ரொம்பப் பிடிச்ச கோலம் இந்த பிக்ஷாடன மூர்த்தி தான். உலகத்தாருக்காகத் தான் கெளரவம் பார்க்காமல் பிச்சை எடுக்கணும்னா எவ்வளவு பெரிய மனசு வேண்டும். பார்த்தாலே மனம் விம்மிக் கண்ணீர் சுரக்கும். நன்றி அம்மா பகிர்வுக்கு.