Sunday, October 3, 2010

காத்தருள் கச்சி ஏகம்பனே!--2

மண்டிடும் வினைதனில் வாடியும்
கொண்டிடும் அன்பினில் கோரியே
தண்டமிழ்ப் பாமலர் சாற்றினேன்
கண்டருள் கச்சியே கம்பனே....3.

கோருதல்=வேண்டுதல்.

தண்ணுமை துடிதரும் தண்ணொலிப்
பண்ணுடன் ஆடிடும் பாதனே
பெண்ணுமை பதியருள் பேறளி
கண்ணுதல் கச்சியே கம்பனே....4.

தண்ணுமை=மத்தளம்.

2 comments:

jeevagv said...

ஆகா, அருமை!

Thangamani said...

மிக்கநன்றி ஜீவா!

அன்புடன்,
தங்கமணி.