நிலைமண்டில ஆசிரியப்பா.
நல்லிசை வாணி!நான்முகன் தேவி!
கல்வியும் நீயே!கலைகளின் ராணி!
யாழிசை ஒலிநீ!ஏழிசை அரசி!
தூயநின் பதமே தொழுதேன் தாயே!
சந்ததம் உனையே சரணெனக் கொண்டேன்!
உன்றனின் அருள்தான் உற்றிடு புகலாம்!
செந்தமிழ் பாக்கள் சிறப்புறப் புனைய
செம்பொருள் தேர்சொல் செல்வமாய் அருளே!
வயசு கோளாறு
10 months ago
5 comments:
அருமை!
சந்த்தம், சந்ததம் என்றிருக்க வேண்டுமல்லவா?
(சந்ததம் - எப்போதும்)
நற்றமிழ் சொற்கள் நவின்றே சந்ததம்
பொற்றாள் தனையே புகல்.
//சந்த்தம், சந்ததம் என்றிருக்க வேண்டுமல்லவா?
(சந்ததம் - எப்போதும்)//
ஆமாம்.தட்டச்சு செய்கையில் ஏற்பட்ட பிழை!
சரி செய்கிறேன்.
பாராட்டுக்கும்,தவறு சுட்டியதற்கும்
ஜீவா!மிக்கநன்றி!
//நற்றமிழ் சொற்கள் நவின்றே சந்ததம்
பொற்றாள் தனையே புகல்.//
அருமையான குறள்வெண்பா
அன்புடன்,
தங்கமணி.
அருமை!
செந்தமிழ் பாக்கள் அல்லது செந்தமிழ்ப் பாக்கள்??? எது சரி????
//செந்தமிழ் பாக்கள் அல்லது
செந்தமிழ்ப் பாக்கள்??? எது சரி????//
செந்தமிழ்ப்பாக்கள் என்பது சரி.
இந்தத் தவறுகள் அடிக்கடி செய்கிறேன்.
நன்றி!கீதா!
அன்புடன்,
தங்கமணி.
//நற்றமிழ் சொற்கள் நவின்றே சந்ததம்
பொற்றாள் தனையே புகல்.//
ஜீவா! குறள்வெண்பாவில் ஒருதளை தட்டல்
இருக்கிறது!
சரிசெய்யவும்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment