Tuesday, April 14, 2009

சீர்பேசி உய்தல் சிறப்பு.


மண்ணுலகை வாழ்விக்க வந்துதித்த ராமனையே
எண்ணிநிதம் பண்பாடி ஏற்றிடுவோம்!-- வண்ணமதில்
கார்மேகம் மாரியெனக் காத்தருளும் பண்பாளன்
சீர்பேசி உய்தல் சிறப்பு.

9 comments:

Geetha Sambasivam said...

இரண்டு நாட்களாய்த் தொலைக்காட்சியிலும் ராமரே வந்துட்டு இருக்கார். நேத்திக்குப் பொதிகையிலே உப்பிலி அப்பன் கோயில் ஸ்ரீராமநவமி உற்சவம், அருமையான ஒளிபரப்பு, இன்னிக்குக் காலையிலே ஜெயா தொலைக்காட்சி கும்பகோணம் ராமஸ்வாமி கோயில் காட்டினாங்க. அருமையான ராமாயணச் சித்திரங்கள், இங்கே உங்க கவிதை ராமனையே குறித்து. மிக மிக எளிமையாவும் அதே சமயம் மனதையும் தொடும் விதமா எழுதறீங்க.

"உழவன்" "Uzhavan" said...

இலக்கணக் கவிதையோ? நன்று

Thangamani said...

உங்கள் கருத்துக்கு நன்றி!கீதா!

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...
This comment has been removed by the author.
Thangamani said...

//இலக்கணக் கவிதையோ? நன்று//


உங்கள் கருத்துக்கு நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Anonymous said...

என்னுடைய நேயர் விருப்பம்...
நம்ம ஊர் சிவகாமசுந்தரியை வருணித்து ஒரு கவிதை...
அப்புறம் நம் ஓடைப்பிள்ளையார் பற்றி.....
காத்திருக்கிறேன்.
உமா.

Geetha Sambasivam said...

//நம்ம ஊர் சிவகாமசுந்தரியை//

சிதம்பரம்?????

Thangamani said...

அன்புள்ள கீதாசாம்பசிவம்!
எங்களூர் தாரமங்கலம்.சேலத்துக்கு பக்கத்தில் இருக்கிறது.
சிற்பக் கலை அழகில் உயர்ந்த கைலாசனாதர் கோவில்
மிகச் சிறப்பானது.
ஈஸ்வரனின் பெயர் கைலாச நாதர்,அம்பாளின் பெயர் சிவகாமசுந்தரி.

ஓடைப் பிள்ளையார் சக்தி வாய்ந்த பிள்ளையார்.
உமா என் சகோதரி.சுந்தரின்னு(சிவகாமசுந்தரி)
சகோதரியும் உண்டு.

sury siva said...

தங்களது பாடல்கள் இங்கே பாடப்படுகின்றன.
தாங்கள் வரவேன்டும்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com