Wednesday, May 13, 2009

தாயன்பு!

துறவிகளும் அன்பாய்த் தொழுதிடுவர் தாயை;
கறவையினம் காத்தவனைக் கட்டும்-- திறமுடையத்
தாயன்பிற்(கு) கெல்லையுண்டோ? சக்தியுரு வாகிடுவாள்
கோயிலுறைத் தெய்வமெனக் கூறு.

கறவையினம் காத்தவன்=கோபாலன்
கட்டும் தாயன்பு=யசோதையின் அன்புக் கட்டுக்கு

2 comments:

Geetha Sambasivam said...

ஆமாம், சங்கரரின் மாத்ருகா பஞ்சகம் நினைவில் வருது. அன்னையர் தினத்துக்கான கவிதையோ? அருமையான கவிதைக்கு வாழ்த்துகளும், நன்றியும்.

Thangamani said...

அன்புள்ள கீதாசாம்பசிவம்!
தங்கள் வரவிற்கு நன்றி!
அழகான கருத்தும் தந்தீர்!வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.