பொன்னில் ஒளிரிழை புதுமலர்ச் சரங்கள்
...பொலியத் திகழும் அழகோடு
கன்னல் சிலைமலர்க் கணைகரம் அணைத்து*க்*
...கருணை பொழியும் விழியாளே!
மின்னல் கொடியென மிளிர்ந்திடும் இறைவி!
...வியந்து மனத்துள் தொழுகின்றேன்!
இன்னல் தருவினை இடரதும் தொலைய
...இணைபூம் பதமே சதமென்பேன்!
16 comments:
அன்னை காமாட்சியின் திருக்கோலம் கண்டேன், நன்றி அம்மா.
மகிழ்ச்சியடைந்தேன்!
மிக்க நன்றி கீதாபரமசிவம்!
அன்புடன்,
தங்கமணி.
அம்மா, கீதா சாம்பசிவம்! :))))))))))s
அச்சச்சோ!
கீதா சாம்பசிவம்!மன்னிச்சுக்கோ!
தவறுதலாய் எழுதி விட்டேன்!
இனி இத்தவறு நிகழாவண்ணம் பாத்துப்பேன்!
சுட்டியதற்கு நன்றிம்மா!
அன்புடன்,
தங்கமணி.
பரவாயில்லை அம்மா, பிழை ஏற்படுவது சகஜம் தானே! :))))))))
http://www.youtube.com/watch?v=HUBoITFMSi4
அன்னை காமாட்சியின் திருக்கோலம்
இங்கே மோஹன ராகத்தில் கேளுங்கள்.
சுப்பு ரத்தினம்
சூரி அவர்களுக்கு,
வணக்கம்.
அழகான மோகனத்தில்
நன்றாகப் பாடியிருக்கிறீர்கள்!
கேட்டு மகிழ்ந்தேன்!நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
மிக அருமை.
நேற்று தான், என் அக்கா செண்பகப் பூ ,மாலை கட்டி, "நாகராஜா, இந்த பெரிய மாலை பெரியவாளுக்கு, குட்டி மாலை காமாக்ஷிக்கு" என்று தந்ததும், "அங்க வெச்சுடு, காலைல போடலாம்" என்றேன்.
காலையில் குளித்து விட்டு வந்து பார்த்தால், அம்மா ஏற்கனவே பெரிய மாலையை பெரியவா படத்தில் போட்டிருந்தாள். (அதற்கு கீழே பல்லக்கு, அதனுள் பெரியவா - காமாக்ஷி - பரமேஸ்வரன் என்று அமைப்பு) கதவைத் திறந்து, சின்ன மாலை காமாக்ஷிக்குன்னு அக்கா குடுத்தா, ஆனா, பெரியவாளுக்கு தான் போடப் போறேன். காஞ்சிபுரத்துல, எல்லாரும் என்னைக் கேட்டபோது பெரியவா தான் காமாக்ஷின்னு, உணர்த்தினா மாதிரி, நீ தான் இதை சரி பண்ணிக்கணும் என்று வேண்டியபடி, மாலையை அணிவித்துவிட்டு வந்துவிட்டேன்.
மதியம் சாப்பிட அக்கா கீழே வரும்போது, வைத்தியின் மெயில் வந்திருந்தது, அதில் தங்கள் blog-ன் link பார்த்தேன்! அதைத் திறந்தாள், நான் எப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கும், சதாரா படிக்கட்டில் நின்று ஆனந்தமாய்ச் சிரிக்கும் என் பெரியவா kaamaakshiyudan! இதே போன்ற படம் என் பெரியவா ஆல்பத்தில் இருக்கிறது. (அந்த ஆல்பத்தை தான் பெரியவா இருபது நிமிடங்கள் பார்த்தார்).
நமஸ்காரம்.
//நான் எப்போதும் பார்த்துக்கொண்டேயிருக்கும், சதாரா படிக்கட்டில் நின்று ஆனந்தமாய்ச் சிரிக்கும் என் பெரியவா kaamaakshiyudan! இதே போன்ற படம் என் பெரியவா ஆல்பத்தில் இருக்கிறது. (அந்த ஆல்பத்தை தான் பெரியவா இருபது நிமிடங்கள் பார்த்தார்).//
திரு.நாகராஜ் அவர்களுக்கு,
பெரியவாளிடம் உங்களுக்கு இருக்கும் பக்திக்கு
மிகவும் மகிழ்கிறேன்.
நிகழ்வுகளைச் சொன்னவிதம் சுவையாக இருக்கிறது!
மிக்க நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
நன்றி. பெரியவா, பிரபஞ்ச மகா ஸக்தி. அது தான் என் சகலமும்.
may i know your mail id? or can i post something in this space for comment itself?
Saturday, June 28, 2008
1. அம்மாவும் அப்பாவும் கல்யாண நாளை முன்னிட்டு (30-3-08) தேனம்பாக்கம் பாடசாலை, காஞ்சிபுரம் அதிஷ்டானம் மற்றும் ஒரிக்கை மணி மண்டபம் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்தனர். ம்யூசிக் அகாடெமி annual exam இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை.
வந்ததும், பிரசாதமாக ரோஜா இதழ்களும் துளசியும் வில்வ இலைகளும் சாப்பிட்டேன். பின்பு, பெரியவா படத்திற்கு ஹாரத்தி பண்ணும்போது... சற்று மேலே கை உயரும்போது பெரியவாளின் படம், நான் இதுவரை அறிந்திராத ஒன்றை ஸ்புரிக்கச் செய்தது...
சிவலிங்கம் அருகில் பெரியவா... அப்போதுதான் புரிந்தது....
தேனம்பாக்கத்தை சிவாஸ்தானம் என்று கூறுவர். அங்கு ஸ்வாமிக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர். தக்ஷிணாமூர்த்தியும் உண்டு. பெரியவாள் 70 களில் தேனம்பாக்கத்தில் தவமியற்றி அருள்பாலித்ததை விவரிக்கையில், "பெரியவா சிவாஸ்தானத்தில் இருந்தபோது..." என்று தான் சொல்வார்கள்.
சிவ - என்றால் ஈசன். சிவா - என்றால் அம்பாள். ஈசன் ஆட்சி புரியும் தேனம்பாக்கத்தில், சிவா - அம்பாள் ஸ்தானத்தில் பெரியவா.
சென்ற முறை காயத்ரி வெங்கட்ராகவனுக்கு வாசிக்க காஞ்சிபுரம் சென்றிருந்தபோது, அன்னதான சத்திரத்தில் இருந்து முதலில் காமாக்ஷி கோயிலுக்கு அழைத்துச் சென்றார் ஸ்ரீ T.V.S. சாரி மாமா. வீல் சேர் கொண்டு போயிருந்ததால் நானும் சென்றேன். அனேகமாக எல்லோருமே, "நாகராஜன்.. இவ்ளோ தடவை மஹா பெரியவாளை தரிசனம் பண்ணீருக்கேள்... காமாஷியை வந்து தரிசனம் பண்ணினதில்லையா?" என்று ஆச்சிரியமாய்க் கேட்டார்கள்.
ஒரு நிலைக்கு மேல் வீல்ச்சேரில் செல்ல இயலவில்லை. அங்கிருந்து தவழ்ந்து உள்ளே சென்று அருகில் அம்பாளை தரிசித்துவிட்டு, பின்பு அதிஷ்டானத்தில் கச்சேரி வாசித்தேன்.
நிகழ்ச்சி முடிந்ததும், அதிஷ்டானத்தில் பிரசாதம் கொடுக்கும்போது, சந்திரமௌலி, பெரியவாளிடம் இருந்து எல்லோருக்கும் படம் கொடுத்தார்.
அது....
பெரியவாள் சிரித்தபடி அமர்ந்திருக்கும் படம்.
கையில் கரும்பு மற்றும் காமாக்ஷியின் ஆபரணங்களுடன்...
2. "சக மனிதனாக இருந்த ஸ்வாமிநாதன்....."
இன்று காலை, பெரியவாள் பல்லக்கைத் திறந்ததும் மனதில் இந்த வரி தான் ஓடியது.
காரணங்கள் ஏதுமின்றி,
எண்ணக் குவியல்களை திடுமென எதுவோ கிளறி,
மேலெழுந்து ஆர்ப்பரிக்கும்....
தோன்றித் தோன்றி மறையும்....
வினாடிகளில் வாழ்ந்து மடியும் ஒற்றை வரிகள்.
யோசிக்கையில், பொருத்தங்களை மனது அமைத்துக்கொண்டது.
அத்வைதம் சொல்லுகின்ற, அடியார்க்கருளுபவன், பள்ளியிலே பயின்றதுவும் இரண்டிலா இன்பம் தான். ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவதிற்கு, "அஞ்சிலே ஒன்றைத் தாவியவன், இந்த "ஸ க ம நி த ஸ்(வாமிநாதன்)".
ஒன்றைத் தாவியதால், ஐந்தையும் கடந்தவன்- கடுந்தவன்.
(பஞ்ச பூதங்கள் ஐந்திலே, ஒன்று நீர். ஒட்டும் தன்மையுடையது. நெருப்பை அணைத்தாலும், ஒட்டுதலால் பற்றிக் கொள்ளும். அதனால் தான், தாமரையிலைத் தண்ணீர் போல எனக்கூறுகிறோம். பற்றற்ற தன்மையால், ஐம்புலன்களையும் வெல்லுதல்).
ஹிந்தோளத்தின் ஸ்வரம் இது. இரண்டாவது (த்வைதம்) ஸ்வரமான 'ரி' இல்லை. க்ரமமான ஐந்தில்(ஸ்வரங்களில்) ம த நி என்பதில், 'ம'வில் இருந்து ஒன்றைத் தாவி, 'ம நி த'னானவன் - நான்-அவன்" (தத்வமஸி) என்றானவன்.
இரு கால்கள் கொண்டதால், ஸ்வாமிநாதன். முக்காலும் உணர்ந்ததால் "ஸ்வாமி-நா-தான்."
"அஹம் பிரம்மாஸ்மி" என்றறிந்தவன் - ஆதலால், அருந்தவன்.
அருந்தவன் ஆனதால் பருகுதற்கினியவன்.
தருவதற்கினியென்ன
தஞ்சம் அடைந்த பின்...
தருணங்கள் தேவையில்லை,
தருமூலன் தயை வேண்ட.
அன்புள்ள நாகராஜ்!
ஆசிகள்.என் ஐடிtvthangamani@gmail.com
புத்தாண்டு வாழ்த்துகள்!
நன்றாக எழுதுகிறீர்கள்!வாழ்த்துகள்!
உங்கள் கடிதங்களைப் படித்து மகிழ்கிறேன்!
அன்புடன்,
தங்கமணி.
அருமையாக எழுதறீங்க நாகராஜன், இந்தக் கோணம் முற்றிலும் புதியதாய் இருக்கே, தொடருங்கள் உங்கள் அனுபவத்தை!
http://erodenagaraj.blogspot.com/
Post a Comment