(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)
எழுசீர் விருத்தம்.
(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)
ஆறு கூவிளங்காய் கூவிளம்
ஆறு தானதன தானனா
தேடிவரும் அன்பரெல்லாம் தீந்தமிழ்*ப்*பா மாலைகளைச்
சீர்பெறவே சூட்டிடுவர் வேலவா!
ஓடிவரும் தேனருவி உன்புகழை ஓசையிட்டே
உச்சரித்துப் பாய்ந்துவரும் வேலவா!
கூடிவரும் பக்தியினில் குன்றுதொறும் காண்பதற்கு*க்*
கூவியுன்னை வேண்டிடுவேன் வேலவா!
ஆடிவரும் தோகைமயில் அன்னைதந்த வேலுடனே
அஞ்சலென்று காட்சியருள் வேலவா!
7 comments:
ஆகா, அருமை!
பாடிவந்த பாட்டெடுத்து பைஞ்சொல் பாமாலை
வடித்த பாங்கு பரவசப் படுத்துதம்மா!
//ஆடிவரும் தோகைமயில் அன்னைதந்த வேலுடனே
அஞ்சலென்று காட்சியருள் வேலவா! //
வேலவன் கண்ணெதிரே தோன்றுகின்றான். அருமையான கவிதை! நான்கு வரிகளிலேயே அனைத்தையும் சொல்லி விடுகின்றீர்களே! ஆச்சரியமா இருக்கு! நன்றி அம்மா.
அருமையான பாட்டு, அம்மா!
நா. கணேசன்
அன்புள்ள ஜீவா!
செந்தமிழில் சொல் தொடுத்து தந்த உங்கள்
கருத்துக்கு நன்றி சொன்னேன்!
மிக்க மகிழ்ச்சி!
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள கீதாசாம்பசிவம்!
உங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி ம்மா!
அன்புடன்,
தங்கமணி.
அன்புள்ள கணேசன்!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
உங்கள் தமிழ்த் தொண்டிற்கு என் பாராட்டுகள்!
அன்புடன்,
தங்கமணி.
அண்ணல் இராமனின் அருளால் அற்புதமாய் அமைந்ததொரு பாடல்.
வேல் வேல் முருகன் வேலவன் அஞ்சேல் என அமுது படைத்ததொரு பாடல்.
'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசிக்கும்'
அண்ணாமலையானைப் போற்றுவது ஒரு பாடல்.
இத்தனையும் இயற்றிடுவது அவன் அருள் சிததித்தவர்க்கே சாத்தியம்.
பாடல்களை என்னால் இயன்றவரை, எனக்குத் தெரிந்த அளவில் பாடி மகிழ்வேன்.
விரைவில் எனது வலையில் பதிவிடுவேன்.
சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
Post a Comment