Friday, May 17, 2013

திருவாலங்காடு --1

திருவாலங்காடு (காவிரிக்கரைத் தலம்) (கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், ஆடுதுறைக்கும் குத்தாலத்திற்கும் இடையே உள்ளது.)
---------------------------------------------------------------------------------------
(
அறுசீர் விருத்தம் - மா மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
நினைவார் நெஞ்சில் என்றும்
...நிறைவாய் உறையும் தெய்வம்
முனைநாள் மறலி தன்னை
...மூளும் சினத்தில் செற்று
வினைதீர்த் தருளில் காக்கும்
...வெண்ணீற் றனின்நல் லூராம்
புனலார் பொன்னித் தென்பால்
...பொலியும் ஆலங் காடே....1

விரையார் மலரில் மாலை
...மிளிரச் சூடும் மார்பன்
குரையார் கழல்செய் ஆடல்
...கும்பிட் டன்பர் காணும்
மரைசேர் கையன் பங்காய்
...மங்கை கொண்டான் ஊராம்
திரையார் பொன்னித் தென்பால்
...திகழும் ஆலங் காடே....2

3 comments:

அப்பாதுரை said...

பாடல் பிரமாதம். திருவாலங்காடு போயிருக்கிறேன். என் பாட்டிக்குப் பிடித்த கோவில்.

Thangamani said...

மிக்கநன்றி அப்பாதுரை.உங்கள் பாட்டிக்குப்
பிடித்த கோவிலா?சந்தோஷம்.

Thangamani said...

மிகவும் தாமதமான பதிலுக்கு
வருந்துகிறேன்.இப்போதுதான் உங்கள் பின்னூட்டம்
பார்த்தேன்.