Thursday, October 25, 2012

உனை நினைத்திடும் அகத்தினை அருள் (திருக்கழுமலம்)

 'தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
  தனத்தன தனத்தன .. தனதான' 


அரிக்கிற வினைத்தொடர் அறுத்திடு திறத்தஉன்
...அடித்தொழு பவர்க்கருள் ..புரிவாயே
கரிக்கிற விழித்துளி அருச்சனை எனப்பெறு
...கரத்துடை பலிக்கலன் ..உடையோனே
தரிக்கிற பொடித்துகள் தளர்ச்சியை விடுத்திடும்
...சடைத்தலை வனப்புடன் ..மிளிர்வோனே
சிரிக்கிற முகத்தொரு விழிச்சுடர் படைத்தவ
...திருக்கழு மலத்துறை .. பெருமானே! 



1 comment:

Geetha Sambasivam said...

கரிக்கிற விழித்துளி அருச்சனை எனப்பெறு
...கரத்துடை பலிக்கலன் //

ஆஹா, அற்புதமான அர்ச்சனை, மனம் உருகிக் கண்ணால் பொழியும் கண்ணீர் முத்துக்களுக்கு விலையேது? அருமையான கற்பனை அம்மா. வணங்கிக் கொள்கிறேன்.