இருளென நாளெனவும்
உருளுமிப் பூவுலகில்
குருசிவன் ஒற்றிநினை
வருவினை அற்றிடுமே...6.
பையர வேயணி
மெய்யனி னொற்றியை
நைவினை இற்றிடக்
கைதொழு துய்வரே...7.
இலம்செயும் தீங்கழி
சிலம்பொலி தாளனின்
பலம்தரும் ஒற்றியை
வலம்வர பெற்றியே...8.
இலம்=வறுமை.
பெற்றி=பெருமை.
பயம்கொள எற்றியே
இயமனை செற்றவன்
நயம்தரு ஒற்றிசேர்
பயனதும் வெற்றியே...9.
நியாயமே செய்பவன்
தியாகரா சன்பெயர்
தியானமே செய்திட
கியாதிசேர் ஒற்றியே...10.
கியாதி= புகழ்.
வயசு கோளாறு
1 year ago
5 comments:
nalla kavithai.. arumaiyaana karuththu..nandri..
கருத்துக்கும்,வருகைக்கும்
மிக்கநன்றி!
அன்புடன்,
தங்கமணி.
http://youtu.be/PaFzYw8jy1Y
ingu vandhu bhoopalam raagathil ungal theiveeka kavithai kezhungal.
subbu rathinam.
திரு.சூரி அவர்களுக்கு,
பூபாள ராகத்தில் பக்தியுணர்வாய்ப்
பாடியதைக் கேட்டு மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
அருமையான பாடல் அம்மா.
Post a Comment