Friday, April 15, 2011

திருஒற்றியூர்!

கற்றிலா ரெனினுசீர்
ஒற்றியூர் அரன்பதம்
பற்றியே தொழுதிடச்
சுற்றமோ டுயர்வரே....1

உலைவெலாம் அற்றிட
நிலவுசேர் உச்சியன்
மலையனார் ஒற்றியை
வலம்வர பெற்றியே...2


உலைவு=சஞ்சலம்.
உச்சி= உச்சந்தலை.
பெற்றி= பெருமை.

எந்தையாம் ஒற்றியூர்
செந்தழ லன்பதம்
வெந்துயர் தீர்த்தருள்
தந்திடும் மெய்யிதே...3

நற்றவன் ஆதியின்
ஒற்றியை நாடிடச்
சுற்றிடும் ஏதமும்
அற்றிடும் ஓர்கவே...4

ஏதம்=துன்பம்.

அண்ணியன் அன்பினுக்குக்
கண்ணுதல் ஒற்றிநகர்
எண்ணுக என்மனமே
நண்ணிடும் நன்மைகளே...5

3 comments:

sury siva said...

திருவொற்றியூர் சென்று அங்கு
தியாகேசனாக வீற்றிருக்கும் சிவபெருமானைத்
தரிசிக்கவேண்டுமென எனது ஆவல்
தங்களது பாவினால் நிறைவானது.

சிந்து பைரவி ராகத்தில் பாடுகிறேன்.
அருள் கூர்ந்து கேளுங்கள்.


சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

எல் கே said...

திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்தான் உங்களை பற்றி சொல்லி லிங்க் அனுப்பினார்கள்.

நன்றிமா

Thangamani said...

அன்புள்ள எல்.கே.,
கீதாவுக்கு என்றென்றும் என்நன்றி!
உங்கள் வரவுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
தங்கமணி.