Tuesday, April 12, 2011

வண்ணப் பாடல்!

திருநின்றவூர்
=============
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்த தான


கத்துமொலி தத்துதிரை சுற்றிவரும்
....இத்தரையி லுற்றவுயிர் அத்தனையும்
....உத்தமநின் சத்தியினில் வைத்திடுவை....மங்கைபாகா
எத்தனைவி தப்பிறவி யுற்றழுது
....மத்துறுத யிர்க்கடைத லுற்றநிலை
....அப்பிலெழு மொக்குளென விட்டழிய....நொந்தபோதும்
நித்தியமில் மித்தையறு அத்தனுனை
....உத்திநிறை சித்தமொடு பற்றிடவும்
....நித்தமுநி னைத்துரைசெய் அக்கரமொர்....ஐந்துமானாய்!
புத்தமுத நற்கவிதை இக்குநிகர்
....சொற்றமிழில் நெக்குருக வைத்தமறை
....பெற்ற தவர் நிற்பணியும் பொற்புடைய....நின்ற ஊரே!

4 comments:

Geetha Sambasivam said...

கத்துமொலி தத்துதிரை//

அம்மா, கத்தும் ஒலி தத்து உதிரை?? இங்கே என்ன பொருள்? கொஞ்சம் புரியவில்லையே? :(

Geetha Sambasivam said...

தொடர

Thangamani said...

உங்கள் ஐயம் தீரும் என நம்புகிறேன்.
நன்றி கீதா!

//கத்துமொலி தத்துதிரை//
முழங்கித் ததும்பும் கடல்
திரை=அலை.இங்கு கடலுக்கு ஆகிவந்தது.
திரை=கடல்.
கத்து=முழங்கு தல்
தத்து=ததும்புதல்
(தத்து நீர்க்கடல் (கம்பரா//)
தத்து=ததும்புதல்.
//கத்துகடல் சூழ்நாகை (தனிப்பா//
முழங்கு தல்

Thangamani said...

உங்கள் ஐயம் தீரும் என நம்புகிறேன்.
நன்றி கீதா!

//கத்துமொலி தத்துதிரை//
முழங்கித் ததும்பும் கடல்
திரை--ஆகுபெயர்
திரை=அலை.இங்கு கடலுக்கு ஆகிவந்தது.
திரை=கடல்.
கத்து=முழங்கு தல்
தத்து=ததும்புதல்
(தத்து நீர்க்கடல் (கம்பரா//)
தத்து=ததும்புதல்.
//கத்துகடல் சூழ்நாகை (தனிப்பா//
முழங்கு தல்