Friday, February 25, 2011

மதுரை!


பொழில்நிறை மதுரையில் விழவினில் திகழ்பவன்
எழில்விழி நுதலுடை யோனே
எழில்விழி நுதலுடை யோன்கழல் விழைவுற
உழ்ல்வினை அகன்றிடும் உடனே....6

புனல்தவழ் மதுரையில் புகல்தரும் துணையவன்
கனல்தவழ் கரமுடை யோனே
கனல்தவழ் கரமுடையோன்கழல் கருதிட
மனம்கொளும் உயர்வுறு மதியே....7

வலம்பெறு மதுரையில் விடையமர் மறையவன்
பொலம்திகழ் திருவுடை யோனே
பொலம்திகழ் திருவுடை யோன்கழல் புணையெனும்
பலம்தரும்;அறும்தொடர் பவமே....8

வயம்நிறை மதுரையில் வரம்தரும் இறையவன்
கயல்விழி உமைபுடை யோனே
கயல்விழி உமைபுடை யோன்கழல் கைதொழல்
மயல்தரு வினையறும் வழியே....9

மொய்வள மதுரையில் சிறந்திட முறைசெயும்
மெய்புனை பொடியுடை யோனே
மெய்புனை பொடியுடை யோன்கழல் விழைவுற
எய்திடும் உயர்வதும் எளிதே....10

மொய் = பெருமை.

7 comments:

sury siva said...

மதுரையாளும் சுந்தரனை சொக்க நாதனை
மனமுருகப்பாடும் உமது
கவிதை கண்களைக்குளமாக்கியது.

இதோ !! முதல் ஐந்து நாலடிகளை
இனிய தோடியிலும்
ஈற்றே வரும் ஐந்து நாலடிகளை
அழகான ஆரபியிலும் பாட
முயன்றேன்.

இன்னும் சற்று நேரத்தில் எனது வலைப்பதிவான
http://vazhvuneri.blogspot.com
ல் வரும். அருள் கூர்ந்து கேட்கவும்.

இந்த பாட்டின் சந்தத்தினை, இலக்கணம் அறியா யான் ஏதேனும்
குலைத்திருப்பின் மன்னித்தருள வேண்டும்.
சந்தங்களை சிருஷ்டித்தவனும் சிவன்.
சந்தங்களுக்கு அப்பாற்பட்டவனும் சிவன்.
சிந்தனையே சிவன்பால் கொண்ட தங்களுக்கோ
சந்தங்கள் சந்தனம்போல் குழைகின்றன.

சுப்பு ரத்தினம்.

sury siva said...

http://www.youtube.com/watch?v=rLuf_7__gs0

inge vaarungal.
kezhungal.

subbu rathinam

Thangamani said...

திரு.சுப்புரத்தினம் அவர்களுக்கு,
ரொம்ப மகிழ்ச்சியோட மனசு நெறஞ்ச நன்றியைத்
தெரிவிச்சுக்கறேன்.
உங்கள் பக்தி உணர்வும், இசை ஆர்வமும்,
பாராட்டுக்குரியது.தோடியிலும்,ஆரபியிலும்
அழகாகப் பாடியிருக்கிறீர்கள்.மிக்க நன்றி!

சிவசிவாவுக்கு என் நன்றியைச் சொல்லணும்.அவர் விதவித இலக்கணங்களில்
பாடல்கள் இயற்றுவார்.அதைப் பார்த்து ஏதோ நானும் எழுதறேன்.
சிவன் நடத்தறான்.நாம் நடக்கிறோம்.

அன்போடு,
தங்கமணி.

Geetha Sambasivam said...

அம்மாவின் பாடல்கள் அருமை எனில் சூரி சாரின் இசையமைப்புக்குக் கேட்கணுமா? இப்போ இங்கே சவுண்ட் போடமுடியலை, ஒரே சத்தம், ராத்திரி கேட்கிறேன்.

Thangamani said...

உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும்
மிக்கநன்றி!கீதா!

மதுரை சரவணன் said...

arumaiyaana paatal mathurai sokkanai kuriththu.. vaalththukkal

Thangamani said...

உங்கள் வருகைக்கு,கருத்துக்கு
மிக்க நன்றி!சரவணன்!