Sunday, July 4, 2010

அம்மானை!


கனல்கரத்தான் தீப்பறக்கும் கண்விழியான் வெந்தழலான்
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் அம்மானை!
சினச்சிரிப்பில் முப்புரமும் செந்தீயாம் ஆமாயின்
மனங்கொண்ட அன்பர் மலையாரோ அம்மானை!
முனம்வந்து ஆல்நிழல்கீழ் மோனமுற்றார் அம்மானை!

11 comments:

ராம்ஜி_யாஹூ said...

அம்மனை அல்லது அம்மானை

இலங்கை தமிழில், அம்மானை என்றால் தாய் மாமனை என்று அர்த்தம்

அம்மன் என்றால் பெண் தெய்வம்

Geetha Sambasivam said...

அம்மான் என்றால் தமிழ்நாட்டிலும் தாய் மாமனைத் தான் குறிக்கும், ராம்ஜி யாஹூ அவர்களே. இது அம்மானை என்றொரு விளையாட்டைக் குறிக்கும் சொல். சொல்லே அம்மானை என்றே வரும்.

அம்மானை (p. 25) [ ammāṉai ] , அம்மனை, s. a kind of verse; 2. a kind of legerdemain or play.// இந்த இடத்தில் இரண்டாவதாய் வரும் பொருள் தான் எடுத்துக்கணும். நன்றி.

Geetha Sambasivam said...

அம்மா, அருமையான கவிதைக்கு நன்றி. படிக்கும்போதே ஈசனின் முப்புரம் எரித்தபோது சிரித்த அட்டஹாசச் சிரிப்பு கண்ணில் தோன்றுகிறது.

வேர்ட் வெரிஃபிகேஷன் இன்னிக்கு ரொம்பப் படுத்தி விட்டதே?? :))))))))))))))

Thangamani said...

அன்புள்ள ராம்ஜி,
உங்கள் கருத்து சரியே.கீதாசாம்பசிவம் அவர்கள்
விளக்கமாகச் சொல்லியுள்ளார்.
பெண்கள் பாடி கொண்டே ஆடும் விளையாட்டு.

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

அன்புள்ள கீதா,
உங்கள் வருகைக்கும், ராம்ஜிக்கு அளித்த
விளக்கத்திற்கும் மிக்க நன்றி!
கவிதையைப் பற்றிய உங்கள் பாராட்டுக்கும்
மனமுவந்த நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

அன்புள்ள கீதா,
வேர்ட் வெரிபிகேஷனை எடுக்கச் சொல்லி
என் மகனிடம் சொல்லுகிறேன்.அவன் தான் எனக்கு
வலைப்பூ எல்லாம் அமைத்துக் கொடுத்தான்.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

விஜய் said...

உமிழ்கண்ணன் புகழ்பாடி வீடடையும் நெறிதன்னில்
தமிழ்மூவர் பாக்குவியல் ஓர்கடலாம் அம்மானை!
தமிழ்மூவர் பாக்குவியல் ஓர்கடலே ஆமாயின்
அமிழ்ந்ததிலே போகாமல் தெரிவாரோ அம்மானை?
தமிழ்த்தங்க மணியாகில் ஒளிராரோ அம்மானை!


(சிவனது புகழ்பாட மூவர் தேவாரம் கடலென இருக்க, இன்றொருவர் தானும் பாடல் இயற்ற துணிந்தால், அக்கடலில் மூழ்கிவிடாது மேலே தெரிபவரும் உள்ளாரோ? தமிழ் வல்ல தங்கமணியாகின் அவ்வாறு வெளியே தெரிந்து ஒளிரவல்லார்! உமிழ்கண்ணன் – தீ உமிழும் நுதல்விழியன்; தமிழ்த்தங்க மணியாகில் – தமிழ் வல்ல தங்கமணியாகில், உள்ளே தமிழானது தங்கும் மணியாகில் ஒளிர்வர் என்பதும்!)

Geetha Sambasivam said...

தீ உமிழும் நுதல்விழியன்; தமிழ்த்தங்க மணியாகில் – தமிழ் வல்ல தங்கமணியாகில், உள்ளே தமிழானது தங்கும் மணியாகில் ஒளிர்வர் என்பதும்!)//

vijay, அருமையான ரசனை, கண்ணீரே வந்துவிட்டது. அம்மாவுக்கு இதைவிட வேறு பாராட்டுத் தேவையில்லை. ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

Thangamani said...

அன்பு விஜய்,
அருமையான அம்மானைப் பாடல் அழகாக
அளித்ததற்கு மகிழ்வுடன் நன்றி!உன் பாராட்டிற்கு
என் மனப்பூர்வமான வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

அன்பு கீதா,அன்பு விஜய்,
சிவசிவா எழுதும் பதிகங்கள் என் உள்ளத்தில்
அதைப் போல எழுதும் ஆசையால் எழுதுகிறேன்.
சிவாவுக்கு என்நன்றி சொல்லுகிறேன்
மிக்க நன்றி!
//விஜய், அருமையான ரசனை, கண்ணீரே வந்துவிட்டது.
அம்மாவுக்கு இதைவிட வேறு பாராட்டுத் தேவையில்லை.
ரொம்பவே சந்தோஷமா இருக்கு.//உங்களுக்கு என்னவிதம் நன்றியைத் தெரிவிப்பேன்?

அன்புடன்,
தங்கமணி.

விஜய் said...

கீதா அவர்களே,

///கண்ணீரே வந்துவிட்டது// என்னங்க இப்படிலாம் சொல்லி என்னைக் கூச வைக்குறீங்க... உங்க எதிரொலிக்கு நன்றி...


தங்கமணி அம்மா,

முதல் முறை எனக்கு முடுகியல் பா எழுத உந்துதலா இருந்ததும் உங்க பாட்டுதான், இப்ப முதல் முறையா எனக்கு அம்மானை பாட வாய்ப்பா, பொருளா, உந்துதலா இருக்குறதும் நீங்கதான், இதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்றதுதான அறம்...

நன்றி அம்மா...

தொடர்ந்து இப்படி அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகைகளை எழுதுங்கள்...
உங்கள்
பாத்தேன் பருக இருக்கிறேன்
காத்தே நான் ஈயாக...
:-)