
நனிசுடுவெவ் வினையகல நலமருளும் துணைவனவன்
இனிதறியா அமண்தீயர் எறிதிரையிட் டாலுமப்பர்
புனிதனடி போற்றியடை பாதிரிப் புலியூரே....7.
புகைகொண்ட எரிகானில் பொற்கழலன் நடனமதில்
அகலாத அன்புகொள்ளும் அடியவரின் அருளாளன்
பகைகொண்டார் நாவரசைப் பாழியிட்டும் அஞ்செழுத்தைப்
புகலென்றே கரையேறு பாதிரிப் புலியூரே....8.
பாழி=கடல்.

2 comments:
திருப்ப்பாபுலியூர் கூடலூர் பக்கத்தில் இருக்கும் இருக்கும் ஊர் அது ....
அதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பதம்
//Anonymous said...
திருப்ப்பாபுலியூர் கூடலூர் பக்கத்தில் இருக்கும் இருக்கும் ஊர் அது ....
அதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பதம்//
திருநாவுக்கரசர், திருப்பாதிரிப்புலியூர் சிவபெருமானைப்
பாடிவழிபட்ட தலமாகும்.
"திருந்தா அமணர்தந் தீநெறிப்
பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்
புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்
தாய்பா திரிப்புலியூர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற
வாமல்வந் தேன்றுகொள்ளே."
என்று திருநாவுக்கரசர் பாடியப் புகழுடைய
திருப்பாப்புலியூர் எனப்படும் திருப்பாதிரிப்புலியூர்,
பாடல்பெற்ற தலமாகும்.
4.94.10
//இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்,
தேவியார் - தோகையம்பிகையம்மை.//
Post a Comment