நுரையுடன் தோன்றும் நீர்க்கு மிழியாகும் வாழ்வில்
...நுதல்மேவு கண்ணன் தொழுவாய்!
இரைதரும் பாறைக் குள்ளும் சிறுதேரை வாழ
...இயல்பாகும் ஈசன் அருளே!
விரைமலர் மாலை மார்பில் அணியாகக் கொண்டு
...வினையாவும் தீர்க்கும் பரமன்
வரைமகள் நேயப் பங்கன் ,மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!
வயசு கோளாறு
1 year ago
2 comments:
விரைமலர் மாலை=??? என்னனு புரியலை, அகராதியிலேயும் தேடிப் பார்த்தேன், புரியலை. :(
//விரைமலர் மாலை=??? என்னனு புரியலை,
அகராதியிலேயும் தேடிப் பார்த்தேன், புரியலை. :(//
அன்புள்ள கீதா!
மிக்க நன்றி!வாழ்த்துகள்!
விரை=வாசனை,மணம்,தேன்
மணம் =வாசனை
விரைமலர்= மணமலர்,அல்லது தேன்மலர்.
விரை மலர்மாலை = வாசனையுள்ள மலர்மாலை
என்னும் பொருளில் எழுதினேன்.
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment