Wednesday, September 23, 2009

ஈசன் அருள்!

பனிக்கின்ற கண்ணாய் படர்கின்ற நீராய்
இனிக்கின்ற தேனாய் இசைக்கின்ற பாவாய்
நினைக்கின்ற வானாய் நிறைந்துள்ள ஈசன்
தனக்கன்பு செய்தால் தயங்காத ருள்வான்

9 comments:

அ. நம்பி said...

அருமையான பாட்டைச் சுவைக்கவும் அவனருளை எண்ணிச் சிலிர்க்கவும் வாய்ப்புக் கொடுத்தீர்கள் அம்மா. திருவருள் என்றும் துணைநிற்பதாக.

Thangamani said...

அன்புள்ள நம்பி,
மிக்க நன்றி!உங்கள் உணர்வுபூர்வமான
கருத்துரைக்கு!

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

புயங்கப் பெருமான் புஜங்கம்- 2 என்ற
தெய்வப் பதிகம்(பத்துப் பாடல்கள்) பாடிய
சிவசிவாவுக்கு என்மனம் நிறைந்த நன்றியைச் சொல்லுவேன்.
அவர் எழுதியதைப் பார்த்த ஆர்வத்தில் நான் இரண்டு பாடல்கள்
எழுதினேன்.இந்தப் பாடலும் ஒன்று.

Visu Pakkam said...

பல காலமாக வெறும் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளையும் அதில் தமிழ் சீரழிக்கப்படுவதையும் கண்டு தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றியே மிகக் கவலை கொண்டிருந்தேன். இது போன்ற இடுகைகள்தான் அச்சத்தைப் போக்கும் மாமருந்தாக உள்ளன.
உங்கள் எழுதுக்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். மேலும் தொடர உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Thangamani said...

விசு அவர்களே!
உங்கள் கருத்துக்கு,பாராட்டுக்கு மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

நிகழ்காலத்தில்... said...

//தனக்கன்பு செய்தால் தயங்காத ருள்வான்//

வாழ்த்துக்கள் தங்கமணி அவர்களே

Thangamani said...

//வாழ்த்துக்கள் தங்கமணி அவர்களே//

மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி

Geetha Sambasivam said...

அருமையான கவிதைக்கு நன்றி, அம்மா. பல நாட்களாய் இணையத்துக்கே சரியாய் வர முடியலை!

Thangamani said...

//அருமையான கவிதைக்கு நன்றி, அம்மா.
பல நாட்களாய் இணையத்துக்கே சரியாய் வர முடியலை!//

அன்பு கீதாம்மா!
உங்கள் உடல்நலனையும் கவனித்துக் கொண்டு
இணையத்தில் உலவுங்கள்!
பாராட்டுக்கென் மனமார்ந்த நன்றி ம்மா!

அன்புடன்,
தங்கமணி.