காலை நேரக் கவிதையினைக்
...காகம் தினமும் படிக்கிறது!
சோலை மணக்கும் புதுமலரால்!
...தோன்றும் விடியல் கதிரொளியால்!
பாலைப் பொழியும் பசுவினம்தான்!
...பரிவாய் அருளும் இயற்கையைப்பார்!
வேலைத் துவங்க எழுந்திடுவாய்!
...வீடும் நாடும் நலமாகும்!
வயசு கோளாறு
1 year ago
2 comments:
எல்லாக் கவிதைகளையும் இன்று தான் படிச்சேன். விடியல் பற்றிய கவிதை நல்லாவே இருக்கு. ஆனால் எத்தனை பேருக்கு அந்த அழகும், சுகமும் தெரியும்,புரியும்? வருத்தமாயே இருக்கு! அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. நன்றிம்மா.
அன்புள்ள கீதா!
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
'காலைநேரக் கவிதைதனை
...காகம் தினமும் படிக்கிறது!'
திரு.இலந்தை அவர்கள் இந்தத் தலைப்பில் அறுசீர்விருத்தம் பயிற்சிக்காக அளித்தார்.
அப்போது நான் எழுதினேன்.ஆனால் அதே தலைப்பில்
இப்போது ஒன்று எழுதினேன்.அதுதான் இது.
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment