இளம்பிறை அணிந்தவன் இரங்கிடும் பரஞ்சுடர்
...எந்தை அன்பை நினைந்தின்பு கொள்வமே
களம்கறை அணிந்தவன் கனிந்தருள் வழங்கிடும்
...கால காலன் பதந்தன்னை வாழ்த்துவம்!!
உளம்நிறை வடைந்திட ஒளிர்ந்திடும் திகம்பரன்
...உந்து பாத நடம்தன்னை ஏற்றுவம்!
வளம்தரும் அவன்துணை வரம்தரும் தினம்தொழ
...மன்று ளானை மனம்கொள்ள வேண்டுவம்!
வயசு கோளாறு
1 year ago
2 comments:
அன்புள்ள தங்கமணி,
நாளுக்கு நாள் உன் கவிதைகள் மெருகேறி ஜொலிக்கிறது.
களம் கறை அணிந்தவன்......அர்த்தம் என்ன?
உமா.
அன்புள்ள உமா!
உன் பாராட்டுக்கு நன்றி!
களம் =தொண்டை
கறை=நஞ்சுண்டதால் ஏற்பட்டக் கறை.
சிவன் நீலகண்டன்,கறைகண்டன்.விடமுண்டகண்டன்
என்று பலவாறுப் புகழப் படுகிறார்.
பாற்கடல் கடையும்போது,விளைந்த விஷத்தை
விழுங்கி எல்லோர்க்கும் நன்மைசெய்ததை நினைத்துப்
பாடலில்,பெரியோர்களெல்லாம் பலவாறாய் சிவனைப் பாடியுள்ளார்கள்.
Post a Comment