Saturday, May 30, 2009

முருகனைப் பாடுவோம்!

மலைதொறும் உறைபவன் மறைதொழும் கடம்பனை
...மாலின் செல்வ மருகோனைப் பாடுவோம்!
கலைமதிச் சடையனின் கதிர்நுதல் விழியருள்
...கந்தன் செவ்வேள் முருகோனைப் பாடுவோம்!
தொலைதரு வினைகளின் தொடரினைக் களைந்திடச்
...சுற்றும் வெல்வேல் கரத்தானைப் பாடுவோம்!
நிலைபெறும் அருளினில் நிறைவினைத் தருகென
...நெஞ்சில் நிற்கும் பெருமாளைப் பாடுவோம்!

4 comments:

sury siva said...

தங்கள் அனுமதியுடன் முருகனைப்பாடுவோம் என்ற அற்புதமான‌
கவிதையை ஹம்ஸத்வனி ராகத்தில் இங்கு பாட முயற்சித்திருக்கிறேன்.

தங்கள் தெய்வத் திருப்பணிக்கு என்றும் என் கரம் குவிக்கும்.
சிரம் சாய்க்கும்.


சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
உங்கள்பாராட்டுக்கு என்நன்றி!
ஹம்ஸத்வனியில் நன்கு பாடியிருக்கிறீர்கள்!
வாழ்த்துகள்!நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

//கலைமதிச் சடையனின் கதிர்நுதல் விழியருள் //
அம்மா, இந்த ஒரு வரியில் முருகனின் பிறப்பைக் கண்ணெதிரே கொண்டு வந்துவிட்டீர்கள்.ரொம்ப அருமையான கவிதை. வைகாசி விசாகத்தில் முருகனை நினைவூட்டும் இந்தப் படைப்பு அருமையான காணிக்கை. பாமாலை சூட்டி அழகு பார்த்திருக்கிறீர்கள்.

Thangamani said...

திருமதி.கீதா!
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!
அன்புடன்,
தங்கமணி.